மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் தாவடி வேத விநாயகர் வீதி உலா

தாவடி ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் ஆலய சோபகிருது வருட மஹோற்சவப் பெருவிழாவின் மஞ்சத் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (07.04.2024) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் புடைசூழ ஓங்கார நாயகன் விநாயகப் பெருமான், வள்ளி, தெய்வயானை சமேத முருகப் பெருமான் வீதி உலா வந்த திருக்காட்சி அற்புதமானது. 

(செ.ரவிசாந்)