'மயிலணிச் சிவன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி திருக்குடவாயில் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்தில் நாளை திங்கட்கிழமை (08.04.2024) யம சங்கார உற்சவம் நடைபெறவுள்ளது.
நாளை மாலை-04 மணியளவில் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து மார்க்கண்டேயர் சிவபூசை செய்யும் நிகழ்வும், மங்கள வாத்தியங்கள் முழங்க விஸ்வநாத சுவாமி வீதி உலா வந்து காலனைச் சங்காரம் செய்து அடியவர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் காட்சியும் இடம்பெறுமென ஆலய ஆதின கர்த்தாக்கள் தெரிவித்துள்ளனர்.