திருநெல்வேலி அரசடி சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மஹோற்சவப் பெருவிழா

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்றுச் செவ்வாய்க்கிழமை (09.04.2024) காலை-09 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்தும் பதினைந்து தினங்கள் மேற்படி ஆலய மஹோற்சவப் பெருவிழா காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறும்.    

இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-17 ஆம் திகதி புதன்கிழமை மாலை தங்கரத உற்சவமும், 18 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை திருமஞ்சத் திருவிழாவும், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கைலாசவாகனத் திருவிழாவும், 20 ஆம் திகதி மாலை கைலாசவாகனத் திருவிழாவும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-07 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை-07 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து  தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும்இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.