இசையால் இதயங்களை வென்ற பிரபல வயலின் வித்துவான் ஜெயராமனின் இறுதி யாத்திரை நாளை

தனது 65 ஆவது வயதில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(08.04.2024) அதிகாலை யாழில் காலமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமனின் இறுதி யாத்திரை நாளை வியாழக்கிழமை (11.04.2024) இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இல-07 கலட்டி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இவரது இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை (11.04.2024) காலை-08 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும். இறுதி அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் அன்னாரின் பூதவுடல் கோம்பையன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்படுமென அன்னாரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

பல நூற்றுக்கணக்கான இசை மேடைகளை அலங்கரித்து வயலின் இசையால் எண்ணுக்கணக்கற்ற இசை இரசிகர்களை வென்ற பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமனின் இழப்பு ஈழ இசைப் பரப்பிற்கு என்றுமே ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாருக்கு அனைவரும் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்துவோம்.

(செ.ரவிசாந்)