சந்நிதியான் ஆச்சிரமத்தில் வயலின் வித்துவான் ஜெயராமனின் நினைவுப் பேருரை


சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நாளை வெள்ளிக்கிழமை (12.04.2024) முற்பகல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் வாராந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.  

நிகழ்வில் இன்னிசைக் கச்சேரிக்குத் தலைமை தாங்கிய மறைந்த வயலின் வித்துவான் சுருதி வேந்தன் அ.ஜெயராமனின் மறைவு குறித்த நினைவுப் பேருரையினைக் கோப்பாய் ஆசிரியர்  கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் ஆற்றவுள்ளார்.