இளநீர்ச் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை!

சர்வதேச சந்தையில் காணப்படும் கேள்விக்கு அமைய இளநீர்ச் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 85 இளநீர் உற்பத்திக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சுத் தெரிவித்துள்ளது. ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, புதிய இளநீர் வகைகளைச் செய்கையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.