குப்பிழான் கன்னிமார் கெளரி ஆலயத்தில் நவசக்தி அர்ச்சனையும் வசந்த உற்சவமும்

யாழ். குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் வசந்த உற்சவம் நாளை வெள்ளிக்கிழமை (19.04.2024) இடம்பெறவுள்ளது.

நாளை காலை-08 மணியளவில் சங்கல்பத்துடன் காலை உற்சவம் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் நவசக்தி அர்ச்சனை இடம்பெற்று அம்பாள் உள்வீதி உலா வருவார்.        

நாளை இரவு-07 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி உலா வலம் வந்து அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் வடக்குப் பக்கமாக வெளிவீதியில் அமைந்துள்ள தீர்த்தத் தடாகத்தில் வசந்த உற்சவம் சிறப்பாக இடம்பெறும்.