கோண்டாவிலில் நாளை தொற்றாத நோய்களுக்கான இலவச பரிசோதனையும் மருத்துவ ஆலோசனைகளும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில் விசேட மருத்துவ குழாத்தினரின் பங்கேற்பில் தொற்றாத நோய்கள் தொடர்பான இலவச பரிசோதனையும் மருத்துவ ஆலோசனைகளும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (19.04.2024) மாலை-03 மணி முதல் மாலை-04.30 மணி வரை கோண்டாவில் கிழக்கு ஶ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலைய மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது. 

நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.