தாவடி வேதவிநாயகர் தேர்த் திருவிழாவில் அடியவர்களின் தாகம் தீர்த்த தண்ணீர்ப் பந்தல்கள்

தாவடி ஶ்ரீ அம்பலவாண வேத விநாயகர் ஆலய சோபகிருது வருட மஹோற்வப் பெருவிழாவின் தேர்த்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) காலை சிறப்பாகவும், பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது.

இதன்போது காந்தி கலைவளர்ச்சி மன்றத்தின் அனுசரணையில் புலம்பெயர் உறவுகள் மற்றும் தாயக உறவுகளின் பங்களிப்பில் ஆலயச் சூழலில்  தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டு அடியவர்களின் தாகம் தீர்க்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

காந்தி கலைவளர்ச்சி மன்றம் வருடாந்தம் இவ் ஆலயத் தேர் மற்றும் தீர்த்தத் திருவிழா காலப் பகுதிகளில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து அடியவர்களின் தாகம் தீர்க்கும் உயர் பணியைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.      

இதேவேளை, மேற்படி ஆலயத் தேர்த் திருவிழா நாளில் தாவடிக் கிராம இளைஞர்களின் பங்களிப்பில் ஆலயச் சூழலில் மற்றொரு தண்ணீர்ப் பந்தலும் அமைக்கப்பட்டு அடியவர்களின் தாகம் தீர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.