சுன்னாகம் பொதுநூலகத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் விற்பனையும்


பிரதேச சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்க ளுக்குச் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகச் சிறுதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் விற்பனையும் நாளை புதன்கிழமை (03.04.2024) காலை-09 மணி முதல் மாலை-04 மணி வரை சுன்னாகம் பொதுநூலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.