இளவாலை வடக்கு வசந்தபுரம் கிராமத்திற்கான குழாய் மூலமான குடிநீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (02.04.2024) மாலை வசந்தபுரம் கிராமச் செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் காலநிலை மாற்றம் மற்றும் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய தேவை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துக்களும் வழங்கப்பட்டதுடன் பிரதேசத்திற்கான குடிநீர்ப் பயன்பாட்டு மேற்பார்வைக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.