உடுப்பிட்டியில் சாதித்தது குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழக அணி!


வடமராட்சி உதைப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் உடுப்பிட்டி நவஜீவன்ஸ்  விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு ஒன்பது பேர் கொண்ட யாழ்.மாவட்ட ரீதியிலான நாவலர் வெற்றிக் கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி- 2024 இன்று செவ்வாய்க்கிழமை (02.04.2024) மாலை உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

சுற்றுப் போட்டியின் முதலாவது போட்டியில் குப்பிழான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து வல்வை விளையாட்டுக் கழக அணி மோதிக் கொண்டது. குறித்த போட்டியின் ஆட்டநேர முடிவில் 0: 0 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமநிலைத் தவிர்ப்பு உதையில் 4:2 என்ற கோல் கணக்கில் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழக அணி வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.