காங்கேசன்துறை ஊரணி கனிஸ்ட வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா

யாழ்.காங்கேசன்துறை ஊரணி கனிஸ்ட வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா-2024 நாளை வியாழக்கிழமை(04.04.2024) பிற்பகல்-02 மணி முதல் மேற்படி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதிபர் பா.செந்தூரன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் வலிகாமம் வலய முறைசாராக் கல்வி உதவிப் பணிப்பாளர் க.கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் த.உதயகுமார், அவுஸ்திரேலியா ஐயமிட்டுண் நிறுவன இயக்குநர் செ. முரளிதரன், ஊறணி புனித அந்தோனியார் ஆலய ஓய்வுநிலைப் பங்குத் தந்தை அருட்தந்தை தி.இ.தேவராஜன் அடிகளார், ஊறணி அந்தோனியார் ஆலயப் பங்குத் தந்தை அருட்பணி. செ.ம.சுதர்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாகவும், யாழ்.அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் ஆசிரியரும், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளருமான அ. அருள் ஜெயரட்ணம், தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்தின் செயலாளர் ப.சாருஜன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.