அராலியில் மின்னொழுக்கினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சைவமகாசபை உதவிக்கரம்


அராலி கிழக்கில் மின்னொழுக்கினால் முற்றாக எரிந்து விட்ட அரை நிரந்தர வீட்டினைப்  பார்வையிட்டு நிர்க்கதியான அன்றாடம் உழைத்து வாழும் குறித்த குடும்பத்திற்கு உணவுப் பொதி, ஒரு தொகுதி ஆடைகள், சிறுதொகைப் பணம் என்பவற்றை அகில இலங்கை சைவ மகாசபையினர் வழங்கி உதவியுள்ளனர்.

வீட்டின் ஒருபகுதியை மறு சீரமைக்கவும், சிறு வாழ்வாதாரம் மற்றும் அனைத்துப் புத்தகங்களும் எரிந்து விட்ட சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவனுக்கு மேசை, கதிரை மற்றும்  கடந்தகால வினாத்தாள்கள் என்பவற்றைச் சைவமகாசபையின் உறுப்பினர்களின் நன்கொடையில் சைவ அறப்பணி நிதியம் ஊடாக வழங்குவதற்கும் அகில இலங்கை சைவமகாசபை நடவடிக்கை எடுத்துள்ளது.  

குறித்த உதவிகள் வழங்கும் செயற்பாட்டை அகில இலங்கை சைவமகாசபையின் பொருளாளர் அருள் சிவானந்தன் நேரடியாகக் களத்தில் ஒருங்கிணைத்து வருகின்றார்.