நீர்வேலி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

யாழ்.நீர்வேலி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி-2024 நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (05.04.2024) பிற்பகல்-02 மணி முதல் மேற்படி பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி.ரேவதி குமரசிறி தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் நீர்வேலி றோ.க.த.க பாடசாலையின் முன்னாள் அதிபர் சின்னத்தம்பி தர்மரத்தினம் பிரதம விருந்தினராகவும், யாழ்.வலய ஆசிரிய ஆலோசகர் நவரத்தினம் சிறிமுருகதாஸ்காந்தன் சிறப்பு விருந்தினராகவும், பழைய மாணவன் கிரிசாந் தம்பதிகள் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.