ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமென ஐக்கியதேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

களுத்துறையில் இன்று வியாழக்கிழமை (04.04.2024) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, சட்டத்தின்படி இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலே நடாத்தப்படும் எனவும், அதற்கான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.