நல்லூரில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (06.04.2024) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02.30 மணி வரை நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு உதிரம் கொடுத்து உயிர்கள் காக்க முன்வருமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.