சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (05.04.2024) முற்பகல்-10.45 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.
நிகழ்வில் யாழ்.சண் இசைக் குழுவின் விசேட இன்னிசை நிகழ்வும் இடம்பெற்றது.நிகழ்வின் இறுதியில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் பக்திப் பாடல்களைப் பக்கவாத்திய சகிதம் பண்ணுடன் பாடி அங்கு கூடியிருந்த அடியவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார்.