கொய்யாத்தோட்டம் நற்பணிமன்றத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (07.04.2024) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த உயிர்காக்கும் இரத்ததானப் பணியில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறும், மேலதிகத் தொடர்புகளுக்கு 0776544500, 0773303811 மற்றும் 0771544265 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.