செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன விளையாட்டுக் கழகத்தின் 34 ஆவது ஆண்டு விழா

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன விளையாட்டுக் கழகத்தின் 34 ஆவது ஆண்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.05.2024) முற்பகல்-10 மணி முதல் சீனியர் லேன், யாழ்ப்பாணம் கலட்டியில் அமைந்துள்ள மேற்படி நிறுவனப் பொது மண்டபத்தில் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன விளையாட்டுக் கழகத்தின் உபதலைவர் ஈ.திருக்கோணேஸ்வரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் 34 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டுக் கடந்த சனிக்கிழமை (25.05.2024) கொக்குவில் இந்துக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நிறுவன ஆண், பெண் அங்கத்தவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்குப் பரிசில்கள், வெற்றிக் கிண்ணங்கள், கேடயங்கள் என்பன இந் நிகழ்வில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.