ஏழாலை அத்தியடி விநாயகப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

'ஏழாலை' எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் முதன்மை வழிபாட்டுத் தெய்வமாக விளங்கும் ஏழாலை அத்தியடி விநாயகப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (14.05.2024) முற்பகல்-10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெறும்.