கோப்பாய் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கம், கேள்வர் நாம் குழுமம் மற்றும் மகிந்தனின் நண்பர்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (18.05.2024) காலை-09 மணி முதல் பிற்பகல்-03 மணி வரை கோப்பாய் சரவணந்தா பாடசாலை அருகாமையில் அமைந்துள்ள மாதர் சங்கக் கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.
100 குருதிக் கொடையாளர்கள் என்ற இலக்குடன் நடைபெறும் இந்த உயிர்காக்கும் உன்னத பணியில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.