15 ஆவது ஆண்டு மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுநாள் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (18.05.2024) மாலை-05 மணி முதல் நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள தமிழினப் படுகொலை சாட்சிய முற்றத்தில் இடம்பெறவுள்ளது.
இனப் படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவேந்த நம்மால் ஒரு மணிநேரம் ஒதுக்க முடியாதா என்ன? குடும்பத்துடன் திரண்டு வாருங்கள்! வரலாறுகளைக் கடத்துவோம்! தமிழராய் எழுவோம்! எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.