மயிலணிச் சிவனுக்கு செவ்வாயன்று தேர்த் திருவிழா

'மயிலணிச் சிவன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி திருக்குடவாயில் விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (21.05.2024) காலை-09 மணியளவில் இடம்பெறவுள்ளது.

நாளை திங்கட்கிழமை (20.05.2024) மாலை-06.30 மணியளவில் சப்பரத் திருவிழாவும், எதிர்வரும்-22 ஆம் திகதி புதன்கிழமை காலை-09 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-06.30 மணியளவில் கொடியிறக்கத் திருவிழாவும் இடம்பெறுமென மேற்படி ஆலய ஆதீன கர்த்தாக்கள் தெரிவித்துள்ளனர்.