இந்தியக் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன் பிடித்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் ஏழு இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கன்னியாகுமரிக்குத் தென்கிழக்கே 74.8 கடல் மைல் தொலைவில் தூத்துக்குடி கடலோரக் காவல் படையினரால் இலங்கை மீனவர்கள் ஏழு பேர் நேற்றுச் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான இலங்கை மீனவர்கள் கடல்வழியாகத் தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மத்திய, மாநில உளவுத்துறை விசாரணையைத் தொடர்ந்து இலங்கை மீனவர்களை இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.