உரும்பிராயில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு

மே-18, முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு தமிழினப் படுகொலை வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (16.05.2024) முற்பகல்-10 மணியளவில் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உரும்பிராயில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது.

கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என்.இன்பம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் ஒரு நிமிட மெளன அஞ்சலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  நிகழ்வில் கலந்து கொண்ட சங்க அங்கத்தவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.