கொக்குவிலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைத் தலைமுறைகளிற்குக் கடத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (17.05.2024) நண்பகல்-12 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. 

நிகழ்வில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வாங்கிப் பருகியதைக் காண முடிந்தது.


இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலும், யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வை 15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரத்தில் தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.