மீளவும் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவிகளுக்கும் தெரிவுகள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் உட்பட அனைத்துப் பதவிகளுக்குமான தெரிவுகளை மீள நடாத்துவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுகூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (19.05.2024) முற்பகல்-10.30 மணி முதல் இரவு வரை வவுனியாவில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.