தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் தொழிற்சந்தை நிகழ்வு

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் மேற்படி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்து நடாத்தும் தொழிற்சந்தை நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (31.05.2024) காலை-09 மணி முதல் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.