சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவரும், சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு. திருமுருகனின் 63 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க இறையருள் வேண்டி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (28.05.2024) குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் விசேட பொங்கல் வழிபாடுகளும் பூசை வழிபாடுகளும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை-09 மணியளவில் ஆச்சிரம முன்றலில் விசேட பொங்கல் வழிபாடுகளும், மோதகம் அவியலும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆச்சிரமத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானுக்கும், சிவலிங்கப் பெருமானுக்கும், ஈழத்து- இந்தியச் சித்தர்கள், ஞானிகளின் உருவப் படங்களுக்கும் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.