நாளை வெளியாகிறது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை வெள்ளிக்கிழமை (31.05.2024) வெளியிடப்படுமெனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. இப் பரீட்சைக்கு 346, 976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது