கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும் குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் குட்டிச் சுட்டி முன்பள்ளியின் விளையாட்டு விழா-2024 நாளை ஞாயிற்றுக்கிழமை (12.05.2024) பிற்பகல்-02.30 மணி முதல் கோண்டாவில் கிழக்கிலுள்ள குட்டிச் சுட்டி முன்பள்ளியின் முன்றலில் மேற்படி சனசமூக நிலையத் தலைவர் து.சுதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலாளர் திருமதி.சுபாஜினி மதியழகன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள், தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி.துஷானி ஸயந்தன், கிளிநொச்சி மாவட்டச் செயலக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களக் கணக்காளர் ப.கஜேந்திரன், ஓய்வுநிலை அதிபர் சண்.வாமதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.