"காளி கோயில்" என அழைக்கப்படும் குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை (12.05.2024) மாலை-06 மணியளவில் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் இடம்பெறவுள்ளது. உற்சவ காலங்களில் தினமும் மாலை-06 மணியளவில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வரும் காட்சி இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
(செ.ரவிசாந்)