போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்

 

ஈழப் போராட்ட வரலாற்றின் முதல் வித்தாகிப் போன பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உரும்பிராயிலுள்ள பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் இன்று 05.06.2024 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. 

போராளிகள் நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த ஈஸ்வரன்  தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செய்ததனை தொடர்ந்து மலர் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. 


அதனை தொடர்ந்து சிவகுமாரனின் திருவுருவச் சிலை அமைந்திருக்கும் இடத்தின் பின் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் கட்சி அங்கத்தவர்களின் சிற்றுரைகளைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பாடசாலை பைகள் வழங்கி வைக்கப்படடன. அதனை தொடர்ந்து 50 கொய்யா மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் போராளிகள் நலன்புரி சங்கத்தினர், வலிகாமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், முன்னாள் மாநகரசபை பிரதி மேயர் ஈசன், அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம் மற்றும் பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் பங்குபற்றினர்.