தெல்லிப்பழையில் நாளை இளையதலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் வைபவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகனின் 63 ஆவது பிறந்தநாள் குறித்துப் பிறந்தநாள் அறநிதியச் சபை நடாத்தும் இளையதலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் வைபவம் நாளை ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) காலை-09 மணி முதல் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி அன்னபூரணி மண்டபத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

நிகழ்வில் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர். வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தின ராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.