சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காமப் பாதயாத்திரைக் குழுவினருக்கு ஐந்தாம் கட்ட உதவிகள்

கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழாவை முன்னிட்டுத் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமக் கந்தன் ஆலயத்தை நோக்கிச் சைவமரபுப் பாரம்பரியம் மிக்க பாத யாத்திரையை முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக் குழுவினருக்குக் கடந்த  செவ்வாய்க்கிழமை (11.06.2024) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வைத்துச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் உதவிப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.  

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரமத் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று குறித்த உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்.