யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நாளை இரத்ததான முகாம்

இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தின் 100 ஆவது சிறைச்சாலைப் பாதுகாவலர் அணியின் ஒன்பது வருட சேவைக் காலப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்து நடாத்தப்படும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (15.06.2024) காலை-08.30 மணி தொடக்கம் மாலை-03.30 மணி வரை யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த உயிர்காக்கும் இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பங்களிப்பை வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.