உடுவில் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினர் ஏற்பாடு செய்துள்ள உணவுத் திருவிழா நாளை புதன்கிழமை (24.07.2024) காலை- 09 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை யாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின் முன்பாகவுள்ள நடைபாதையில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.