சிறைகளுக்குள் இரையாக்கப்பட்ட ஈழத்தமிழ் அரசியல் கைதிகளின் பொதுநினைவேந்தல் நாள்

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைச் சிறைகளுக்குள் இரையாக்கப்பட்ட ஈழத்தமிழ் அரசியல் கைதிகளின் பொதுநினைவேந்தல் நாள் நிகழ்வு நாளை வியாழக்கிழமை (25.07.2024) மாலை-03.05 மணி முதல் யாழ்.நகரிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் சிறைகளுக்குள் கொல்லப்பட்ட அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்படும். தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெறும். சமூகத்தின் பெயரில் இலங்கைச் சிறைகளுக்குள் இரையாக்கப்பட்ட எமது உறவுகளை உணர்வு பூர்வமாக நினைவு கூரும் இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள், முன்னாள் அரசியல் கைதிகள், சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவ மற்றும் ஆசிரியர் சமூகத்தினர், ஊடகத்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு சமூக உரிமையோடு அழைத்து நிற்பதாகக்  குரலற்றவர்களின் குரல் அமைப்ப்பினர் தெரிவித்துள்ளனர்.