மாவிட்டபுரம் கந்தனின் திருக்கைலாச வாகனத் திருவிழா இன்று

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் காம்யோற்சவப் பெருவிழாவின் திருக்கலாச வாகனத் திருவிழா இன்று வியாழக்கிழமை (25.07.2024) இரவு சிறப்பாக நடைபெறவுள்ளதாக மாவை ஆதீனகர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை-04 மணிக்கு 108 சங்காபிஷேகத்துடன் திருக்கைலாச வாகனத் திருவிழா ஆரம்பமாகும். மாலை-05:15 மணியளவில் சாயரட்சைப் பூசையும், மாலை-06 மணியளவில் ஷண்முகார்ச்ச னையும், மாலை-07 மணியளவில் கலைநிகழச்சியும், மாலை-07:30 மணியளவில் இரண்டாம் காலப் பூசையும் இடம்பெறும். இரவு-07.45 மணியளவில் வசந்த மண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து இரவு-08.30 மணியளவில் மாவைக் கந்தப் பெருமான் புதிதாக அமைக்கப்பட்ட திருக்கைலாச வாகனத்தில் வெளிவீதி உலா வரும் திருக்காட்சியும் இடம்பெறும். 

(செ.ரவிசாந்)