யேசுராசாவின் எழுத்துலகம் தொடர்பில் இணையவழிக் கலந்துரையாடல்

இலக்கியவெளி நடாத்தும் மூத்த எழுத்தாளர் அ.யேசுராசாவின் எழுத்துலகம் தொடர்பிலான  இணையவழிக்  கலந்துரையாடல் நாளை சனிக்கிழமை (27.07.2024) மாலை-06.30 மணியளவில்  ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

நிகழ்வில் எழுத்தாளர்களான இ.இராஜேஸ்கண்ணன், சு.குணேஸ்வரன், ந.மயூரரூபன், ந.குகபரன், சி.விமலன், சி.ரமேஸ் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர். குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் Meeting ID: 389 072 9245, Passcode: 12345 ஊடாக இணைந்து கொள்ள முடியுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.