புன்னாலைக்கட்டுவன் கிறேசர் வீதியின் புனரமைப்புத் தொடர்பான சமூகக் கண்காணிப்புக் கூட்டம்

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏழாலை உப பணிமனைக்கு உட்பட்ட ஜே-207 புன்னாலைக்கட்டுவன் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைவுற்ற கிறேசர் வீதியின் புனரமைப்புத் தொடர்பான சமூகக் கண்காணிப்புக் கூட்டமானது நேற்று வியாழக்கிழமை (25.07.2024) மாலை வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் திருமதி. சாரதா உருத்திரசம்பவன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் தொழில்நுட்ப உத்தியோகத்தர், உள்ளூராட்சி உதவியாளர், ஏழாலை உப பணிமனைப் பொறுப்பதிகாரி, வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.