நாய்களுக்கான இலவசக் கருத்தடைச் சத்திர சிகிச்சை


வலிகாமம் வடக்குப் பிரதேச சபை மற்றும் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் நாய்களுக்கான இலவசக் கருத்தடைச் சத்திர சிகிச்சை மற்றும் வளர்ப்பு நாய்களுக்கான பதிவு நாளை செவ்வாய்க்கிழமை (13.08.2024) காங்கேசன்துறைப் பொதுச்சுகாதாரப் பிரிவிற்குட்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, பட்டிக்கடவை சனசமூக நிலையத்திற்கு அருகாமையில், மாவிட்டபுரம் கிளினிக் சென்ரர் அருகாமையில், மாவிட்டபுரம் வாளித் தொழிற்சாலைக்கு அருகாமையில், மாவிட்டபுரம் கிராம  சேவையாளர் அலுவலகத்திற்கு அருகாமையில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் குறித்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.