தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் கடந்து வந்த பாதை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப்பொது வேட்பாளராகத் தமிழரசுக் கட்சியின்   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் இன்று வியாழக்கிழமை (08.08.2024) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யார் இந்த அரியநேந்திரன்? என்பதை இங்கு பார்ப்போம்....   

1959 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்-01 ஆம் திகதி பிறந்த இவர் தனது பாடசாலைக் கல்வி, உயர்கல்வியை நிறைவு செய்த பின்னர் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றினார். 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் 1976 ஆம் ஆண்டு தனது அரசியல் பிரவேசத்தை இவர் ஆரம்பித்தார். 1990 ஆம் ஆண்டு முதல் சுயாதீன ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும் பணிகள் ஆற்றிய இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனாலும், கிங்ஸ்லி ராசநாயகம் 2004 மே மாதமளவில் தனது பதவியைத் துறந்ததை அடுத்து வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையிலிருந்த அரியநேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார். இதன்பின்னர் 2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

இதேவேளை, இவர் 2016 ஆம் ஆண்டு முதல் ஆறு வருடங்கள் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராகவும் செயற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது