தெல்லிப்பழை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் ஆடிப்பூர உற்சவம் நேற்றுப் புதன்கிழமை (07.08.2024) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆடிப்பூர உற்சவத்தின் ஒரு கட்டமாக இடம்பெற்ற தம்பதி பூசை ஆடிப்பூர உற்சவத்தில் கலந்து கொண்டிருந்த அனைத்து அடியவர்களினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
ஆடிப்பூர உற்சவத்தில் பிரதம குருக்களாக முன்னின்று கிரியை மற்றும் விசேட வழிபாடுகளை சிறப்பாக வழிநடாத்திய அளவெட்டி மண்ணைச் சேர்ந்த சிவாகம கிரியா தத்துவ நிதி சிவஸ்ரீ இராமசூரிய பிரபாகரக் குருக்களை அவரது வாழ்க்கைத் துணைவியாருடன் ஒருசேர அமர வைத்து குறித்த தம்பதி பூசை இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செ.ரவிசாந்)