வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (09.08.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதனை முன்னிட்டு இளங் கலைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் தினமும் நல்லூர் முருகன் உற்சவகாலத் தெய்வீக இசை அரங்கு நிகழ்வுகள்-2024 மேற்படி ஆலயச் சுற்றாடலில் அமைந்துள்ள நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மாலை-06.45 மணியளவில் மங்கள விளக்கேற்றல், தேவாரம், ஆசி உரையுடன் தெய்வீக இசை அரங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்கமைய நாளை மாலை-06.55 மணி முதல் இரவு-08.05 மணி வரை மங்கள இசை நிகழ்வு இடம்பெறும்.