இராமநாதன் கல்லூரியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு மைதான நிகழ்ச்சிகள்

சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்.இராமநாதன் கல்லூரியின் 110 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை (17.08.2024) பிற்பகல்-02 மணியளவில் கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் திருமதி.அம்பிகை சிவஞானம் தலைமையில் மைதான நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் லண்டனைச் சேர்ந்த பழைய மாணவி திருமதி.யாழினி நிதர்சன் பிரதம விருந்தினராகவும், கொழும்பைச் சேர்ந்த பழைய மாணவி திருமதி.பிறேமா ஜெகன், லண்டனைச் சேர்ந்த பழைய மாணவி திருமதி.கோபிகா பஞ்சலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்களின் வலைப்பந்து, கூடைப் பந்து, கிளித்தட்டு மற்றும் கயிறிழுத்தல் ஆகிய விளையாட்டு நிகழ்வுகளும், கெளரவிப்பு நிகழ்வும் நடைபெறும்.