வடமராட்சி துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (27.08.2024) சிறப்பாக நடைபெறவுள்ளது.
இன்று காலை-06.45 மணியளவில் உஷக் காலப் பூசையுடன் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகிறது. இன்று இரவு-09 மணியளவில் சங்காபிஷேகமும், நள்ளிரவு-12 மணியளவில் கண்ணன் பிறப்புத் தரிசனமும், தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.நாளை புதன்கிழமை (28) அதிகாலை-04 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கிருஷ்ண பரமாத்மா உள்வீதி, வெளிவீதி வலம் வரும் திருக்காட்சியும் இடம்பெறும்.
(செ.ரவிசாந் )