இணையவழியில் இன்று அரசியல் கருத்துப் பகிர்வு நிகழ்வு

தமிழ்சிவில் சமூக அமையத்தின் ஒழுங்கமைப்பிலான அரசியல் கருத்துப் பகிர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (27.08.2024) இரவு-08 மணியளவில் இணையவழியில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் பத்திரிகையாளர் அ.நிக்ஸன் கலந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய நிலையும், தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேவையும் எனும் தலைப்பிலும், சமூக, அரசியல், பொருளாதார ஆய்வாளர் ம.செல்வின் இரேனியஸ் தமிழ்ப் பொதுச்சபையும் பொதுக் கட்டமைப்பும்: சமகாலமும் எதிர்காலமும் எனும் தலைப்பிலும் கருத்துரைகள் ஆற்றவுள்ளனர்.

குறித்த கருத்துப் பகிர்வில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் Meeting ID: 929 2280 3057, Passcode: 191812 இணைந்து கொள்ள முடியுமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்துள்ளனர்.