யாழ். இந்துக் கல்லூரியில் கலாசார விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிறுவுநர் வாரத்தை முன்னிட்டுக் கலாசார விழா நாளை  புதன்கிழமை (28.08.2024) காலை-08 மணி முதல் மேற்படி கல்லூரியின் சபாலிங்கம் அரங்கத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட சம்ஸ்கிருதத் துறைத் தலைவர் கலாநிதி.மகேஸ்வரக் குருக்கள் பாலகைலாசநாத சர்மா பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்வார். நிகழ்வில் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.